இணைய பாதுகாப்பு கழகத்தை நிறுவ ‘டிவெட்’ தேசிய மன்றம் இணக்கம்

இணைய பாதுகாப்பு கழகத்தை நிறுவ 'டிவெட்' தேசிய மன்றம் இணக்கம்

புத்ராஜெயா, 23/09/2024 :  இணைய பாதுகாப்பு கழகம் ஒன்றை நிறுவுவதற்கு, டிவெட் தேசிய மன்றம் ஒப்புக் கொண்டுள்ளது.

இணைய பாதுகாப்பு துறையில் அதிக உள்ளூர் நிபுணர்களை உருவாக்கும் நோக்கில் இந்த கழகம் நிறுவப்படுவதாக, துணைப் பிரதமர் டத்தோ ஶ்ரீ டாக்டர் அஹ்மட் சாஹிட் ஹமிடி கூறினார்.

”இணையப் பாதுகாப்புத் துறையில் ஆள்பலம் குறைவாக உள்ளது. சுமார் 26 ஆயிரம். எனவே, இணையப் பாதுகாப்பு கழகம் ஒன்றை நிறுவ நாங்கள் முன்பே முடிவு செய்து விட்டோம். சில பல்கலைக்கழகங்களில் இது குறித்த பாடத்திட்டத்தை அறிமுகம் செய்து விட்டாலும், அவர்களுக்கு அங்கீகாரம் வழங்குவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது”, என்று அவர் கூறினார்.

இன்று, புத்ராஜெயாவில் நடைபெற்ற 66 அரசு தொடர்பான நிறுவனங்கள் GLC, தனியார் நிறுவனங்கள் மற்றும் டிவெட்டைக் கொண்டிருக்கும் 12 அமைச்சுகள் இடையிலான கலந்துரையாடலில் டாக்டர் அஹ்மட் அதனைத் தெரிவித்தார்.

Source : Bernama

#TVET
#AhmadZahidHamidi
#MalaysiaNews
#LatestNews
#Malaysia

Comments are closed, but trackbacks and pingbacks are open.