தானியங்கி பொது வாகனங்களில் 5G பயன்பாடு

தானியங்கி பொது வாகனங்களில் 5G பயன்பாடு

புத்ராஜெயா, 09/09/2024 : அடுத்த ஆண்டு தென்கிழக்கு ஆசிய நாடுகளின் சங்கத்தின் (ஆசியான்) தலைமைதுவத்தை ஏற்கத் தயாராகும் மலேசியா, 5G தொழில்நுட்பத்திற்கான 40 பயன்பாட்டு நிகழ்வுகளில் தானியங்கி பேருந்து சேவை முயற்சியும் ஒன்றாகும் என்று இலக்கியல் அமைச்சர் கோபிந்த் சிங் தியோ கூறினார்.

நாட்டின் 5ஜி பிணைய சேவை நிறுவனமான,டிஜிட்டல் நேஷனல் பிஎச்டி (டிஎன்பி), தொழில்நுட்ப நிறுவனமான எரிக்சன் மற்றும் உள்ளூர் தன்னாட்சி வாகன தீர்வுகள் டெவலப்பர் eMooVit டெக்னாலஜி Sdn Bhd ஆகியவற்றுக்கு இடையேயான கூட்டு முயற்சியாகும் இது , என்று அவர் கூறினார்.

“தானியங்கி பொது வாகனங்களில் 5G பயன்பாடுகளை ஒருங்கிணைப்பது பயணிகளுக்கு புதிய அனுபவத்தை அதிகரிக்கும், மேலும் அவர்கள் பாதுகாப்பாக உணரவும், தொடர்பில் இணையவும் அனுமதிக்கிறது இச்சேவை.

“மலேசியாவை இலக்கியல் தொழில்நுட்ப நாடாக மாற்றுவதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு இணங்க, 5G போன்ற இலக்கியல் தொழில்நுட்பம் பொது சேவைகளில், வணிக வியாபரங்களில் மற்றும் சமுதாய மேம்பாட்டில் பயன்படுத்தப்படும்” என்று அவர் இங்கு நடந்த செயல் விளக்கம் நிகழ்வுக்கு பிறகு செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.