“மாற்றத்தின் சவால்களை ஏற்றுக்கொள்வது ; வெற்றியாளனின் தடம்”குடும்ப மருத்துவர்களின் 26வது அறிவியல் மாநாடு

"மாற்றத்தின் சவால்களை ஏற்றுக்கொள்வது ; வெற்றியாளனின் தடம்"குடும்ப மருத்துவர்களின் 26வது அறிவியல் மாநாடு

ஜோகூர் பாரு, 05/09/2024 : சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ஷுல்கிஹ்லி அமாட், ஜோகூர் பாரு பெர்சாடா சர்வதேச மாநாட்டு மையத்தில் நடைபெற்ற குடும்ப மருத்துவர்களின் 26வது அறிவியல் மாநாட்டை அதிகாரபூர்வமாக துவக்கி வைத்தார்.

மலேசிய குடும்ப மருத்துவர்கள் சங்கம் (FMSA) மற்றும் ஜோகூர் குடும்ப மருத்துவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட இம்மாநாடு, ஜோகூர் மாநில சுகாதாரத் துறை, மோனாஷ் பல்கலைக்கழகம் மற்றும் மலேசியாவின் நியூகேஸில் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் ஒத்துழைப்புடன், பெர்சாடா ஜோகூர் பாரு சர்வதேச மாநாட்டு மையத்தில், செப்டம்பர் 4 தொடங்கி செப்டம்பர் 7 வரை வெற்றிகரமாக நடைபெறும்.

ஆரம்ப சுகாதாரத் துறையில் மருத்துவம் மற்றும் அதனுடன் தொடர்புடைய சுகாதார அறிவியல் வல்லுநர்கள் உட்பட பல்வேறு துறைகளைச் சேர்ந்த 1,000க்கும் மேற்பட்ட உள்ளூர் மற்றும் சர்வதேச பங்கேற்பாளர்களை இந்தத் திட்டம் வெற்றிகரமாக ஈர்த்ததுள்ளது.
“மாற்றத்தின் சவால்களை ஏற்றுக்கொள்வது: வெற்றியாளனின் தடம்” எனும் இவ்வாண்டின் மாநாட்டு கருப்பொருள், மலேசியாவில் வளர்ந்து வரும் மற்றும் சவாலான ஆரம்ப சுகாதார சேவைகளை மேம்படுத்துவதற்கான கல்வி, திறன்கள் மற்றும் மருத்துவ உள்கட்டமைப்பை வலுப்படுத்துவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது.

மாநாட்டில் குழந்தைகள் மற்றும் இளம்
பருவத்தினரின் ஆரோக்கியம், பெண்கள் மற்றும் ஆண்களின் ஆரோக்கியம், முதியோர் பராமரிப்பு, தொற்று மற்றும் தொற்றாத நோய்கள் மற்றும் நோய்த்தடுப்பு சிகிச்சை குறித்தும் விவாதிக்கப்பட்டது.

மேலும் இந்நிகழ்வில் டத்தோ டாக்டர். முஹம்மது ரட்ஸி அபு ஹாசன், சுகாதாரதுறை இயக்குநர், டத்தோ டாக்டர். நோர்ஹயதி ருஸ்லி, சுகாதார துறை துணை இயக்குநர் (பொது சுகாதாரம்), டாக்டர். முகமது ஷாஷிஈ இஸ்மாயில் சுகாதார அமைச்சகத்தின் குடும்ப சுகாதார மேம்பாட்டுப் பிரிவின் இயக்குநர், டாக்டர்.மொக்தார் புங்கூட் @ ஹஜி அஹ்மத், ஜோகூர் மாநில சுகாதார இயக்குனர் மற்றும் டாக்டர். சுரியாட்டி பிந்தி ஹாசிம், 26வது குடும்ப மருத்துவ அறிவியல் மாநாட்டின் (FMSC 2024) தலைவர் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.