சீனாவில் நிலநடுக்கத்தால் பலியானோர் எண்ணிக்கை 400 ஆக உயர்வு :சீனாவில் யுன்னான் மாகாணத்தில் ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 400 ஆக உயர்ந்துள்ளது. யுன்னான் ஜடோங் நகரத்தில் பூமிக்கடியில் 12 கி.மீ. ஆழத்தில் 6.5 விக்டர் அளவு நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் வீடுகள், அலுவக கட்டிடங்கள் குலுங்கின, அங்கிருந்தவர்கள் அலறி அடித்து வெளியே ஓடிவந்தனர். ஏனினும் இடிபாடுகளில் சிக்கி 400 பேர் உயிரிழந்துவிட்டனர். மேலும் 181 பேரை காணவில்லை என்று மீட்பு படையினர் தெரிவித்துள்ளனர். 1400 பேர் படுகாயத்துடன் மீட்க்கபட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
நிலநடுக்கத்தால் 12 ஆயிரம் வீடுகள் இடிந்து நொறுங்கி விட்டதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது. யுன்னான் மாகாணத்திற்கு 30 பேர் கொண்ட மீட்பு குழுவையும் 2000 கூடாரங்களையும் சம்பவ இடத்திற்கு சீன அரசு அனுப்பியுள்ளது. கடந்த 1974 ஆம் ஆண்டு 7.1 விக்டர் அளவுக்கு ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 1500 – க்கும் மேற்ப்பட்டோர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.