செப்பாங், 04/09/2024 : கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையம் 2 இல் (klia2) மலேசியாவின் முதல் சொகுசு விமான நிலைய தங்கும் விடுதி கேப்சூல் டிரான்சிட் MAX-ஐ போக்குவரத்து அமைச்சர் லோக் சியூ ஃபூக் அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்தார்.
CapsuleTransit MAX 5-நட்சத்திர ஹோட்டலுக்குச் சமமான வசதிகளை வழங்குகிறது. பிரீமியம் படுக்கைகள், ஓய்வறைகள், ஸ்பாக்கள் மற்றும் உடற்பயிற்சிக் கூடங்கள் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் முழுமையானதும் ஆகும். மலேசியாவிற்கு வருகை தரும் ஆண்டு 2026க்கு முன்னதாக, கேப்சூல் டிரான்சிட் , மலேசியா ஏர்போர்ட்ஸ் ஹோல்டிங்ஸ் பெர்ஹாட் (MAHB) உடன் இணைந்து 200 படுக்கை வசதிகளை அதிகரிக்க உள்ளது.
இந்நிகழ்வில் MAHB வர்த்தக சேவைகளின் மேலாளர் ஹனி எஸ்ரா ஹுசின், கேப்சூல் டிரான்சிட்டின் நிறுவனர் மற்றும் CEO ரியான் லூ மற்றும் WCT மால்ஸின் CEO செலினா சுவா ஆகியோரும் கலந்துக்கொண்டனர்.
Previous Post: ஆசிய சாலை பாதுகாப்பு மாநாடு 2024
Next Post: பராலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் – மலேசியா