சென்னையில் 100 டிகிரி வெயில்: 2 ஆண்டுகளுக்குப் பிறகு ஆகஸ்ட்டில் அதிக அளவு

சென்னையில் 100 டிகிரி வெயில்: 2 ஆண்டுகளுக்குப் பிறகு ஆகஸ்ட்டில் அதிக அளவு

100

சென்னை உட்பட 4 நகரங் களில் வெயிலின் அளவு வெள்ளிக் கிழமை 100 டிகிரியை தாண்டியது. அதேநேரத்தில் கோவை உள்ளிட்ட சில மாவட்டங்களில் கனமழை பெய்துள்ளது.

கோவை, நீலகிரி, கன்னியாகுமரி மாவட்டங்களில் தென்மேற்கு பருவ மழை காரணமாக கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.

தமிழகத்தில் வெள்ளிக்கிழமை காலை 8.30 மணி நிலவரப்படி கோவை மாவட்டம் சின்னகலாரில் 15 செ.மீ. மழை பெய்துள்ளது. நீலகிரி மாவட்டம் தேவலாவில் 7 செ.மீ., கோவை மாவட்டம் வால் பாறையில் 6 செ.மீ., நீலகிரி மாவட்டம் கூடலூர் பஜாரில் 5 செ.மீ., கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை, நீலகிரி மாவட்டம் நடுவட்டத்தில் 4 செ.மீ., கோவை மாவட்டம் பொள்ளாச்சி, நீலகிரி மாவட்டம் உதகமண்டலம், கன்னியாகுமரி மாவட்டம் குழித் துறை, குளச்சல், தக்கலையில் 2 செ.மீ. மழை பெய்துள்ளது. அடுத்த 2 நாட்களுக்கு தமிழ்நாட்டின் மற்ற பகுதிகளிலும், புதுச்சேரியிலும் ஆங்காங்கே மழை பெய்ய வாய்ப்புள்ளது

எனினும் தமிழகத்தில் வெள்ளிக்கிழமை 4 நகரங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டியது. அதிகபட்சமாக சென்னையில் 101.3 டிகிரி ஃபாரன்ஹீட் பதிவானது. மதுரை மற்றும் நாகப்பட்டினத்தில் 101.12 டிகிரியும், திருச்சியில் 100.76 டிகிரியும் பதிவானது. சென்னையில் 2 ஆண்டுகளுக்குப் பிறகு ஆகஸ்ட் மாதத்தில் 100 டிகிரி வெயில் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.