ஹரிமௌ மலாயா, தி அன்டோல்ட் ஜர்னி ( Harimau Malaya : The Untold Journey) திரைப்பட சிறப்பு காட்சி

ஹரிமௌ மலாயா, தி அன்டோல்ட் ஜர்னி ( Harimau Malaya : The Untold Journey) திரைப்பட சிறப்பு காட்சி

4வார்டு பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்த ஹரிமௌ மலாயா, தி அன்டோல்ட் ஜர்னி ( Harimau Malaya : The Untold Journey) திரைப்படத்தின் சிறப்புக் காட்சி கொண்டாட்ட நிகழ்ச்சியில் இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறையின் துணை அமைச்சர் மாண்புமிகு ஆடம் அட்லி கலந்து கொண்டார்.

தேசிய கால்பந்து அணியின் உண்மைக் கதையால் ஈர்க்கப்பட்ட இத்திரைப்படத்தில் மீர்கீன், டோனி யூசாஃப், சோபியா அல்பரக்பா, ஐமன் ஹக்கீம் ரிட்சா, அமெலியா ஹென்டர்சன், ஹசாமா, எர்ரா ஃபஸிரா, ஐடில் அஜீஸ், நம்ரோன், ஜைன் ஹமீத், டக்ளஸ் லிம் , கவின் ஜே, மியா சாரா, பெல் நகாஸ்ரி, வனிதா இம்ரான், வன்னா அலி, டத்தோ அஃப்ட்லின் ஷௌகி, லியானா ஜாஸ்மே, நபில் ஜகாரியா போன்ற நடிகர்கள் நடித்துள்ளனர். ஆகஸ்ட் 15, 2024 முதல் திரையரங்குகளில் இத்திரைப்படம் திரையிடத் தொடங்க உள்ளது.

இந்நிகழ்வில் ஃபினாஸின் தலைவர் டத்தோ கமில் ஓத்மான், ஃபினஸின் தலைமை நிர்வாக அதிகாரி டத்தோ அஸ்மிர் சைபுடின் முத்தலிப், ஃபினஸின் கார்ப்பரேஷன் உறுப்பினர்கள் திரு. சைஃபுல் ஃபத்லி ஹெச்ஜே மொக்தார் மற்றும் திரு.ரொசைடி அப்துல் ஜாமில் ஆகியோரும் கலந்துக் கொண்டனர்.
ஹரிமௌ மலாயா, தி அன்டோல்ட் ஜர்னி ( Harimau Malaya : The Untold Journey) திரைப்படம் வெற்றிப் பெற என்தமிழ் ஊடகத்தின் வாழ்த்துக்கள்.