மலேசிய டாக்டர் அம்பேத்கர் நற்பணி இயக்கத்தின் ஏற்பாட்டில் ஷா அலாம் IDCC அரங்கில் நடைபெறவிருக்கும் அனைத்துலக டாக்டர் அம்பேத்கர் மாநாடும், அவர்தம் 133 ஆம் பிறந்தநாள் விழாவுக்கான ஊடகவியலாளர் சந்திப்பு இன்று 2nd April 2024 நடைப்பெற்றது.
ஊடகவியலாளர் சந்திப்பில் ஒற்றுமை துறை துணை அமைச்சர் செனட்டர் சரஸ்வதி கந்தசாமி, OMS அறவாரியத்தின் தோற்றுநர் ஓம்ஸ்.பா.தியாகராஜன், மலேசிய டாக்டர் அம்பேத்கர் சமூகநல இயக்கத் தலைவர் டத்தோ பஞ்சமூர்த்தி மற்றும் கல்வி அமைச்சரின் சிறப்பு அதிகாரி திரு.தியாகராஜ் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
எதிர்வரும் 14 , 15 ஏப்ரலில் மலேசிய டாக்டர் அம்பேத்கர் நற்பணி இயக்கத்தின் ஏற்பாட்டில் ஷா அலாம் IDCC அரங்கில் அனைத்துலக டாக்டர் அம்பேத்கர் மாநாடும், அவர்தம் 133 ஆம் பிறந்தநாள் விழாவும் நடைபெறவிருக்கிறது.
மலேசிய டாக்டர் அம்பேத்கர் நற்பணி இயக்கத்தின் தலைவர் டத்தோ பஞ்சமூர்த்தி அவர்களின் தலைமையில் இம்மாநாடு நடைபெறவிருக்கிறது.
டாக்டர் அம்பேத்கரின் சிறப்பம்சங்கள் குறித்தும் அவரின் தொண்டுகளைக் குறித்து அனைத்துலக அளவில் பல்வேறு அறிஞர்கள் ஆய்வுக் கட்டுரைகளைப் படைக்கவிருப்பதால் பெரும் பயனான மாநாடாக இம்மாநாடு திகழும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஒற்றுமை துறை துணை அமைச்சர் செனட்டர் சரஸ்வதி கந்தசாமி அவர்களும் ஓம்ஸ் அறவாரியத்தின் தலைவர் ஓம்ஸ் பா.தியாகராஜன் அவர்களும் ஆலோசகர்களாக இம்மாநாட்டை வழிநடத்துகின்றனர்.
மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராஹிம் அவர்கள் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் 133 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவின் சிறப்பு வருகையாளராகப் பங்கேற்று சிறப்பிக்கவுள்ளார்.
டாக்டர் அம்பேத்கரின் வாரிசான திரு.பீம்ராவ் அம்பேத்கர் அவர்களும் இம்மாநாட்டில் பங்கேற்பதாக மாநாட்டுத் தலைவர் டத்தோ பஞ்சமூர்த்தி தெரிவித்தார்.
அனைத்துலகிலிருந்து 300 க்கும் மேலான பேராளர்களும் மலேசியாவில் 200க்கும் மேலான பேராளர்களும் இதுவரையில் பதிவு செய்திருப்பதாக மாநாட்டுத் தலைவர் டத்தோ பஞ்சமூர்த்தி தெரிவித்தார்.
14 ஏப்ரல் மாலை 3 மணிக்குப் பிரதமர் அன்வார் இப்ராஹிம் மாநாட்டில் பங்கேற்று சிறப்பிப்பார் என மாநாட்டுத் தலைவர் டத்தோ பஞ்சமூர்த்தி இன்று செய்தியாளர் சந்திப்பில் அறிவித்தார்.
இம்மாநாட்டில் அனைத்து மலேசிய இந்திய இயக்கங்களுக்கும் அரசியல் தலைவர்களும் பங்கேற்று சிறப்பிக்கும்படி ஏற்பாட்டுக் குழுவினர் உளமாரக் கேட்டுக் கொண்டனர்.