ம இ கா இளைஞர் பிரிவு தலைவர்களுக்கு பதவிகளும் கொடுக்க வேண்டும் – திரு. தர்மகுமரன் வலியுறுத்தல்

ம இ கா இளைஞர் பிரிவு தலைவர்களுக்கு பதவிகளும் கொடுக்க வேண்டும் – திரு. தர்மகுமரன் வலியுறுத்தல்

Dharmakumaran

கடந்த 24/07/2014 அன்று ம இ கா தலைலையகத்தில் நடைபெற்ற கூட்டரசு பிரதேச ம இ கா இளைஞர் பிரிவு 20 வது பேராளர் மாநாட்டில் ம இ கா மாநில இளைஞர் பிரிவு தலைவர் திரு. தர்மகுமரன் தனபாளன் அவர்கள் என்தமிழ் செய்திகளுக்கு கொடுத்த பிரத்தியேக பேட்டி.

வருகை புரிந்திருக்கும் பெரும்பாலான இளைஞர்கள் அடிப்படையில் ஏழ்மையான குடும்பத்தில் இருந்து வந்தவர்கள். கூட்டரசு பிரதேச இளைஞர்களுக்கு அதிகாரமளித்தல் தொழில் ரீதியில் முன்னேற்றம் அடையச் செய்யவும் அத்தகைய இளைஞர்களை அடையாளம் காணுவதே இந்த மாநாட்டின் முக்கிய நோக்கமாகும். டாக்டர் மகாதீரின் 2020 தொலை நோக்கு திட்டத்தின் நோக்கம் அனைத்து இளைஞர்களையும் பட்டதாரிகள் அல்லது தொழில் அதிபராக்குவதே ஆகும். 2020 இன்னும் சில வருடங்களே எஞ்சியிருக்கும் இவ்வேளையில் நமது இந்திய இளைஞர்களும் வெற்றி பெற ஒரே ஆதரவாகவும் வழிகாட்டியாகவும் இருப்பது டத்தோ M. சரவணனின் புதிய தொலைநோக்கு மேம்பாட்டு திட்டமான “நாம்” இயக்கம் மட்டுமே. அவரை போன்ற தொலை நோக்கு லட்சியத்தோடு போராடும் தலைவரை மாநில தலைவராக கொண்டமைக்கு நாங்கள் பெரிதும் பெருமை கொள்கிறோம். அவரின் வேகத்திற்கு ஈடுகொடுத்து இளைஞர் படையான நாங்களும் உழைக்கத் தயாராய் இருக்கிறோம் என உறுதியளிக்கிறோம். ம இ கா வின் பெரும் உதவியுடன் நாம் திட்டத்தில் இளைஞர்களை ஈடுபடுத்துவோம்.

இளைஞர் பிரிவு தலைவர்களுக்கு குறைந்தது ஒரு செனட்டர் பதவியாவது கிடைக்கப்பெற வேண்டும். ஏனெனில் தேசிய முன்னனியின் கூட்டணி கட்சிகளில் மற்ற கட்சிகளின் இளைஞர் பிரிவு தலைவர்களின் மத்தியில் நமது இளைஞர் தலைவர்கள் முதிர்ச்சி அடையாதவர்களாகவே பாவிக்கப்படுகிறார்கள். சமுதாய முன்னேற்றத்திற்கு உழைக்கத் தயாராய் இருக்கும் இளைஞர்களுக்கு இது போன்ற பதவிகளும் பட்டங்களும் பெரும் ஊக்குவிப்பாக இருக்கும். எதிர்காலத்தில் மற்ற இளைஞர்கள் சேவை புரிய முன் வர இது உதவியாக இருக்கும்.

மாநில தலைவர் டத்தோ M. சரவணன் இந்த இளைஞர் பிரிவு பேராளர் மாநாட்டிற்கு RM 20000 வழங்கினார். இந்த நிதி மூலம் இளைஞர்களுக்கு நிறைய உதவிகள் செய்ய திட்டமிள்ளோம். கஷ்டப்படும் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு, ஒட்டுக் கடைகளுக்கு உரிமம் புதுப்பித்தல் ஆகிய திட்டங்கள் நடைமுறைக்கு வர முறையான செயற்குழு இயங்கத் தயாராய் உள்ளது என திரு. தர்மகுமரன் தன் பேட்டியில் தெரிவித்தார்.