தென் இந்திய நடிகர் சங்க பொதுச் செயலாளரும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவரும் விஷால் ப்ளிம் ப்ராக்டரியின் உரிமையாளருமான நடிகர் விஷால் தனது திரைப்படம் துப்பறிவாளன் மலேசியாவில் திரையிடப்படிருப்பதை ஒட்டி அதனை விளம்பரப்படுத்தவும் பத்திரிக்கையாளர்களை சந்திக்கவும் துப்பறிவாளனை மலேசியாவில் வெளியிட்டிருக்கும் மாலிக் ஸ்ட்ரீம் கார்ப்பரேஷனின் ஏற்பாட்டில் மலேசியா வந்திருந்தார். பத்திரிக்கையாளர் சந்திப்பு நேற்று 15/09/2017 அன்று மாலை 06.00 மணிக்கு ஹோட்டல் ஷண்ட்ரி-லா வில் நடந்தது. மாலிக் ஸ்ட்ரீம்ஸ் கார்ப்பரேஷன் இந்த பத்திரிக்கையாளர் சந்திப்பை ஏற்பாடு செய்திருந்தனர். திலா லக்ஷமணன் இந்த நிகழ்ச்சியின் அறிவிப்பாளராக இருந்தார். துப்பறிவாளன் திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்புடன் மலேசிய கலைத் துறையில் மிக முக்கிய தருணமாக மற்றொரு நிகழ்வும் அதே மேடையில் நடைபெற்றது. மலேசிய இந்தியர்களின் கலை அல்லது பொழுதுபோக்கு சங்கங்களின் கூட்டமைப்பு தென்னிந்திய நடிகர் சங்கம் மற்றும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் ஆகியவற்றுடன் இனி எதிர்காலத்தில் இணைந்து செயல்பட ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொள்ள முடிவு செய்து அதற்கான ஒரு வரைவு திட்டத்தை இந்திய அமைப்புகளின் பிரதிநிதியான நடிகர் விஷாலிடம் வழங்கினார்கள். இந்த நிகழ்வில் பேசிய நடிகர் விஷால் இத்தகைய ஒரு ஒப்பந்தை கையெழுத்தால் ஆனால் இரண்டு தரப்பும் பலனடையும் என்றும் அதற்கு தன்னால் ஆன முயற்சியை எடுப்பேன் என்றும் கூறினார். நடிகர் விஷாலுடன் நடிகர் வினய் மற்றும் நடிகர் ஆதி ஆகியோர் தமிழ்நாட்டில் இருந்து கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வில் மலேசிய கலைஞர்கள் சார்பில் விஜய் எமர்ஜென்சி, இயக்குநர் விஜயசிங்கம், நடிகர் பென் ஜி, THR கவிமாறன், எழுத்தாளர் யுவாஜி, மற்றும் மலேசிய கலைத் துறை சார்ந்த சங்கங்களின் கூட்டமைப்பு பிரதிநிதிகள் பலரும் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானால் மலேசிய தமிழ் திரைப்படம் மற்றும் கலைத் துறைக்கு ஒரு பெரிய மாற்றம் ஏற்படும் என்று துறை சார்ந்த வல்லுநர்கள் கருதுகின்றனர்.