எய்ட்ஸ் என்ற உயிர்க்கொல்லி நோய்க்கு காரணமான எச்.ஐ.வி வைரசால் உலகில் அனைத்து பகுதியிலும் பல்லாயிரக்கணக்கானோர் இறந்து போயிருக்கின்றனர். இந்த வைரசின் தாக்கத்தை குறைக்க இதுவரை மருந்து கண்டுபிடிக்கவில்லை. இந்த நோய் வராமல் இருக்க தற்காப்பு வழிமுறைகளே இப்போது இருக்கும் ஒரே வழி. இந்த வைரஸ் பற்றியும் இதனால் ஏற்படும் மரணம் மற்றும் பாதிப்புகள் இது பரவும் விதம் பற்றியெல்லாம் பொது மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக சமூகத்தின் மீது அக்கறை கொண்ட பலரும் உலகம் முழுதும் பிரச்சாரம் செய்து கொண்டிருக்கின்றனர்.
இதன் அடிப்படையில் மலேசிய தமிழ் கலை துறையில் உள்ள சில பிரபலங்கள் ஒன்றாக இணைந்து தமிழ் கலை உலகில் முதன் முறையாக எச்.ஐ.வி வைரஸ் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதத்தில் “உயிர்க்கொல்லி” என்ற ஒரு தமிழ் பாடலை வெளியிட இருக்கிறார்கள். பீனிக்ஸ் தாசன், பாலன்ராஜ், M ஜெகதீஸ், விகடகவி மகேன், ஹம்சினி பெருமாள், பாய் ரேட்ஜ் ஆகியோர் இணைந்து இந்த பாடலை உருவாக்கியிருக்கிறார்கள். இந்த பாடலுக்கான முதல் போஸ்டர் நேற்று வெளியிடப்பட்டது. எச்.ஐ.வி ஒரு ஆபத்து என்பதை உணர்த்தும் விதத்தில் உயிர்க்கொல்லி போஸ்டர் அமைந்திருப்பது சிறப்பு. இந்த பாடலை மலேசிய Dr. கமல்ஹாசல் நற்பனி இயக்கம் அதிகாரப்பூர்வமாக வெளியிடுகிறார்கள். உயிர்க்கொல்லி பாடல் விரைவில் வெளியிடப்படும்.