தைவானில் விமான விபத்து: 51 பேர் பலி – மோசமான வானிலையால் சம்பவம்

தைவானில் விமான விபத்து: 51 பேர் பலி - மோசமான வானிலையால் சம்பவம்

taiwan

தைவானில் விமானம் விபத்துக் குள்ளானதில் 51 பேர் உயிரிழந்த னர். மோசமான வானிலை காரண மாக விமானத்தை அவசரமாக தரை யிறக்க முற்பட்டபோது விபத்து ஏற்பட்டுள்ளது. விமானத்தில் மொத்தம் 58 பேர் சென்றுள்ளனர்.

மேற்கு ஆசியாவில் உள்ள தைவானை செவ்வாய்க்கிழமை மட்போ புயல் தாக்கியது. அப்போது மணிக்கு சுமார் 170 கி.மீ. வேகத் துக்கு காற்று வீசியதுடன் கனமழை யும் பெய்தது. இதனால் புதன் கிழமை ஏற்பட்ட வானிலை மாற்றத் தால் விமானத்தை செலுத்துவதில் பிரச்சினை ஏற்பட்டது. இதையடுத்து விமானத்தை அவசரமாக தரையிறக்க விமானி முற்பட்டுள்ளார். அப்போது விமானம் தரையில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது.

விபத்துக்குள்ளான விமானம் தைவானைச் சேர்ந்த டிரான்ஸ் ஏசியா நிறுவனத்துக்கு சொந்த மானது. தைவான் தலைநகர் தைபே யில் இருந்து இருந்து பெங்கு தீவு களுக்கு சென்றது. 70 இருக்கைகள் கொண்ட இந்த விமானத்தில் 54 பயணிகளும், 4 ஊழியர்களும் பயணித்துள்ளனர். 51 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டனர். 7 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ள னர்.

மோசமான வானிலை காரணமாக முதல்முறை தரையிறங்கும் முயற்சி தோல்வியடைந்தது. இதையடுத்து இரண்டாவது முறையாக தரையிறங்க முயற்சித்தபோது விமானம் விபத்துக்குள்ளானது.

மலேசிய விமானம் உக்ரைனில் சுட்டு வீழ்த்தப்பட்ட சம்பவத்தில் 298 பேர் உயிரிழந்த நிலையில், ஒருவாரத்துக்குள் ஏற்பட்டுள்ள இந்த விபத்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.