மெக்ரி வேதாஸின் திறமையை முன்னமே நிறைய பார்த்தாகிவிட்டது. அவரது ரெக்கே வகை பாடல்கள் தமிழர்களிடையே மிகவும் பிரபலம். அந்த தாடிக்காரருக்கு என தனியாக அடையாளமும் ரசிகர்களையும் அவர் பெற்றுவிட்டார்.
சென்ற ஆகஸ்ட 10 ஆம் தேதி மெக்ரி வேதாஸ் தனது அடுத்த படைப்பான ஆத்ம ராகம் இசை காணொளியை வெளியிட்டார்.
அவரது புதிய காணொளியை கீழ்கண்ட இணைப்பில் கண்டு களிக்கலாம்
[vsw id=”R3d2Yn9wQN4″ source=”youtube” width=”425″ height=”344″ autoplay=”no”]
ஆத்ம ராகம் பெயருக்கு ஏற்றார்போல பாடல் வரிகள் மன அமைதி பற்றி இருக்கிறது. அந்த இசையோடு மெக்ரியின் குரலில் கேட்கையில் மனம் ஒரு விதமாய் பரவசமும் நிம்மதி அடைகிறது. ஒரு பாடலின் வெற்றி என்பது கேட்பவரின் கவலை மறக்கச் செய்து அந்த இசையில் மயங்கி புத்துணர்ச்சி பெறச் செய்வதே. அதை ஆத்ம ராகத்தின் மூலம் மெக்ரி வேதாஸ் சிறப்பாகவே செய்திருக்கிறார்.
இசை, குரல், பாடல் வரிகள் மட்டுமல்லாமல் குகன் தியாகராஜனின் இயக்கம், பரதன் ரத்தினம் மற்றும் தனராஜ் லட்சுமணனின் காட்சி அமைப்புகள், முகேஷ்வரன் சிவானந்தனின் எடிட்டிங் மற்றும் நிறங்கள் அமைப்பு, சங்கர் காந்தியின் காட்சி வடிவமைப்பு, என்வி நேஷின் மிக்சிங் மற்றும் மாஸ்டரிங் ஆகிய அனைத்தும் மிகவும் சிறப்பாக இருக்கிறது. அந்த நிறங்களும் கிராபிக்சும் ஒரு வித்தியாசமான அனுபவமாக இருக்கிறது. ஆத்ம ராகம் அனைத்து விதத்திலும் மனதிற்கு இதமாக இருக்கிறது.