ஆஸ்ட்ரோ வானவில்லும் வணக்கம் மலேசியாவும் இணைந்து நடத்திய மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி “பேசு தமிழா பேசு 2017” கடந்த 29/07/2017 அன்று நடைபெற்றது. போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு மத்திய கல்வித்துறை துணை அமைச்சர் டத்தோ P.கமலநாதன் பரிசுகளை வழங்கி வாழ்த்தினார். மேலும் அவர் பேசுகையில் மாணவர்களின் திறமைகளை வெளிக்கொண்டுவர இத்தகைய போட்டிகள் நிறைய நடத்தப் படவேண்டும் என கூறினார். இந்த நிகழ்ச்சி விரைவில் ஒளிபரப்பப்படும்.