மலேசிய இந்து சங்கத்தின் ஏற்பாட்டில் தேசிய ஆலய மாநாடு இன்று 30/07/2017 காலை துவங்கி மாலை வரை Institute பெங்கூருசான் கெசியாத்தான் ஜாலான் ரூமா சாகிட் , பங்சார் இல் நடைபெற்றது. இந்த மாநாட்டில் சமூக தலைவர்களும் சமய தலைவர்களும் கலந்து கொண்டு பல தலைப்புகளில் உரையாற்றின்ர். ம.இ.கா தேசிய தலைவரும் மத்திய சுகாரத்துறை அமைச்சருமான டாக்டர் டத்தோ ஸ்ரீ ச.சுப்ரமணியம் மாநாட்டில் கலந்து கொண்டு மாராட்டை துவக்கி வைத்து ”தேசிய இந்து ஆலய வழிகாட்டி” என்ற நூலை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார்.
இந்த விழாவில் மத்திய இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை துணை அமைச்சர் டத்தோ M.சரவணன் அவர்கள் கலந்து கொண்டு ”ஆலயங்கள் திறம்பட செயல்படுவதை உறுதி செய்வதில் அரசாங்கத்தின் பங்கும் கடமையும்” என்ற தலைப்பில் உரையாற்றினார். இந்த மாநட்டில் மலேசிய இந்து சங்கத் தலைவர் டத்தோ ஆர். எஸ். மோகன், மலேசிய இந்து சங்கத்தின் முன்னாள் தலைவர் டத்தோ அ. வைத்தியலிங்கம், தமிழகத்தைச் சேர்ந்த செந்தமிழ் அரசு திரு. சிவக்குமார் உட்பட ஆலய தலைவர்கள், ஆலய குழுவினர், குருக்கள், சமய அறிஞர்கள், இந்து அமைப்புகள் மற்றும் பலரும் கலந்து கொண்டனர்.
இந்நாட்டிலுள்ள இந்து ஆலயங்கள் ஆகம முறைப்படி வழிநடத்த வேண்டும் எனவும் எதிர் காலங்ளில் சிறப்பான அளவில் வழி நடத்த சில முக்கிய அம்சங்களில் கவனம் செலுத்த வேண்டும் என டத்தோ சுப்ரா கூறினார்.
அவை பின்வருமாறு :-
1. இந்து ஆலயங்களை வழிநடத்தும் பொறுப்பும், அதனைக் தற்காக்கும் உரிமையும் இந்துகளுக்கு உள்ளது என்பதை ஒவ்வோர் இந்துவும் உணர வேண்டும்;
2. ஆலய நிர்வாகங்கள் நாட்டின் சட்ட விதிகளை மதித்து நடக்க வேண்டும்
3. ஆலயங்கள் முறையாகச் சமய பிரச்சாரங்களில் ஈடுபட வேண்டும்;
4. ஆலயங்கள் சமூக, சமுதாயத் தொண்டு செய்வது குறித்து ஆராய வேண்டும்;
5. ஆலய நிர்வாகங்கள் காலத் தேவைக்கு ஏற்ப நிர்வாகத்தில் மாற்றங்களை ஏற்படுத்துவது குறித்து ஆராய வேண்டும்; இறுதியாக,
6. இந்து ஆலயங்களில் சமூக, சமுதாய சேவை மையங்களை உருவாக்க வேண்டும்.
அரசாங்கம் அறிவித்துள்ள இந்தியர்களுக்கான பத்தாண்டு வியூக செயல் திட்டத்தின் கீழ், இந்து ஆலயங்களில் சமூக, சமுதாய மையங்களை உருவாக்கும் முயற்சியில் தற்போது “செடிக்” ஈடுபட்டுள்ளது. அதன் முன்னோடி திட்டத்திற்காகத் தற்போது மூன்று ஆலயங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இத்திட்டம் எதிர்பார்த்த பயனைச் சமூகத்தில் ஏற்படுத்துமானால், இத்திட்டம் கட்டங் கட்டமாக நாடு முழுவதும் விரிவுப்படுத்தப்படும் என டத்தோஸ்ரீ சுப்பிரமணியம் மேலும் கூறினார்