பிரேசிலில் நடைபெற்ற உலக கிண்ண காற்பந்தாட்ட இறுதிப் போட்டியில் அர்ஜெண்டினாவை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வெற்றி கோப்பையைக் கைபற்றியது ஜெர்மனி அணி. இந்நிலையில் மீண்டும் நாடு திரும்பிய ஜெர்மனி காற்பந்தாட்ட வீரர்கள், இந்த மாபெரும் வெற்றியைக் கொண்டாடும் வகையில் பேர்லினில் அண்மையில் வெற்றிக் கொண்டாட்டம் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தனர்.
அக்கொண்டாட்டத்தின் போது, உலகக் கிண்ணம் சேதமடைந்துள்ளது. இதுகுறித்து காற்பந்தாட்ட சம்மேளனத்தின் தலைவர், அதன் சிறு பகுதி உடைந்து விழுந்து விட்டது என்றும் விரைவில் இது தங்கள் நாட்டில் இருக்கும் வல்லமை படைத்தவர்களை வைத்து சரி செய்து விடப்படும் என சமாதானம் கூறியுள்ளார். உலகக் கிண்ணத்தை யார் உடைத்திருக்கக்கூடும் என்ற விசாரணை தற்போது தீவிரமாய் நிலவி வருகிறது.