செலிப்ஸ் அண்ட் ரெட்கார்பட் நிறுவனம் தயாரித்துள்ள படம், ”கடவுள் பாதி மிருகம் பாதி”. ராஜ்-சுரேஷ்குமார் இணைந்து இயக்கியுள்ள இப்படத்தில் அபிஷேக், ஸ்வேதா விஜய் மற்றும் நான் கடவுள் பூஜா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இப்படத்தில் ஆடியோ வெளியீட்டு விழா நேற்று காலை சென்னையிலுள்ள சத்யம் திரையரங்கில் காலை 10.30 மணி அளவில் நடைபெற்றது. இந்த விழாவில் படத்தின் இசையமைப்பாளர் கிஷோர் மணி, பாடகர்கள் உன்னி கிருஷ்ணன், விஜய் ஜேசுதாஸ் உள்பட சிலர் கலந்து கொண்டனர்.
விழாவில் நடிகை பூஜா பேசும்போது, இந்த படத்தின் தயாரிப்பாளர் ராஜூம், நானும் பெங்களூரில் படித்தோம். அப்போது எனக்கு 16 வயது. ஒரு கல்சுரல் நிகழ்ச்சியில்தான் நாங்கள் முதன்முதலாக சந்தித்துக்கொண்டோம். அப்போது எங்களுக்கிடையே ஒருவித ஈர்ப்பு ஏற்பட்டது. ஆனால் அது காதல் இல்லை.
நட்புதான். அதையடுத்து ஒரு முறை என்னை சந்தித்தபோது நீ அழகா இருக்கே என்றான். நான் போடா என்று திட்டி விட்டேன். ஆனால் அதன்பிறகும் எங்களுக்கிடையே நட்பு இருந்தது. என் தந்தை படிக்கிற காலத்தில் காதல் கீதல் என்று சுற்றக்கூடாது எனறு கண்டிசனாக சொல்லியிருந்ததால் நானும் ரொம்ப கவனமாக இருந்தேன். யாருடனும் காதலில் விழவில்லை.
அதனால் ராஜூவுடன் எனக்கு நட்பு மட்டுமே இருந்து வருகிறது. இந்த நேரத்தில்தான், ஒருநாள் எனக்கு போன் போட்டு தான் ஒரு படத்தை இயக்கி, தயாரிக்கப்போவதாக ராஜ் சொன்னான். ஆனால் நான் நம்பவில்லை.
பின்னர் ஒருநாள் படப்பிடிப்பு தொடங்கி விட்டோம். நீ ஒரு கேரக்டரில் நடிக்க வேண்டும் என்று சொன்னான். அதன்பிறகுதான் அவன் சொன்னது உண்மை என்பதை அறிந்தேன்.
ஆனால், என்னிடம் பணம் இல்லை அதனால் நட்புக்காக காசு வாங்காமல் நடித்துக்கொடு என்றான் அதனால் நண்பனுக்காக எதையும் எதிர்பார்க்காமல் இந்த படத்தில் நடித்தேன்.
இப்படி பேசிய பூஜா, தான் பேசி முடிப்பதற்குள் தயாரிப்பாளர், இயக்குனர் ராஜை வாடா போடா என்று கிட்டத்தட்ட நூறு தடவையாவது சொல்லி கலகலப்பு மூட்டினார்.