பாக்தாத்தில்  தற்கொலைப் படை தாக்குதல்: 23 பேர் பலி

பாக்தாத்தில்  தற்கொலைப் படை தாக்குதல்: 23 பேர் பலி

Car

ஈராக் தலைநகர் பாக்தாத்தில் போலீஸ் சோதனைச்சாவடி மீது கார் மூலம் நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் 23 பேர் பலியானார்கள். 40 பேர் படுகாயமடைந்தனர்.

பாக்தாத்தின் வட மேற்கு பகுதியிலுள்ள கதிமியாவில் குண்டுகள் நிரப்பப்பட்ட கார் மூலம் போலீஸ் சோதனைச்சாவடி மீது தாக்குதல் நடத்தப்பட்டதில் 5 போலீசார் மரணமடைந்தனர். மேலும் எட்டு போலீசார் காயமடைந்தனர் என அந்நாட்டின் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அத்தாக்குதலில் பொதுமக்கள் 15 பேரும் பலியானதுடன், 24 பேர் படுகாயமடைந்துள்ளனர். கதாமியாவில் உள்ள டைகர் நதிக்கருகே இந்த சோதனைச்சாவடி அமைந்துள்ளது. இந்நகரத்தில் தான் இஸ்லாமியரின் பழமையான வழிபாட்டு தலமும் அமைந்துள்ளது.

அதே போல் நஹ்ரவான் என்ற மற்றொரு நகரின் மார்க்கெட் பகுதியில் நிகழ்ந்த கார் குண்டு தாக்குதலில் 3 பேர் பலியானதுடன் 8 பேர் படுகாயமடைந்ததாக கூறப்படுகிறது. அந்நாட்டில் உள்நாட்டு கிளர்ச்சி ஏற்பட்டதை தொடர்ந்து அங்கு பல பகுதிகளில் அடிக்கடி குண்டுவெடிப்பு நிகழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.