கிளாந்தான் மாநிலத்தில் புதிதாய் அமைய உள்ள பாசோக் மருத்துவமனையின் பூமி பூஜை விழா கடந்த 12/03/2017 அன்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் பிரதம மந்திரி டத்தோஸ்ரீ நஜீப் அப்துல் ரசாக் அவர்களும் சுகாரத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம் அவர்களும் பூமி பூஜை நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். மலேசிய மக்களுக்கு சிறப்பான மருத்துவ சேவை அளிப்பதில் மலேசிய அரசின் சுகாரத்துறை உறுதியாக உள்ளதாக டாக்டர் ச.சுப்ரமணியம் நிகழ்ச்சியில் கூறினார். இந்த மருத்துவனை 76 படுக்கை வசதியுடன் 50 ஏக்கரில் 104 மில்லியன் செலவில் அமைய உள்ளது.
கிளாந்தான் மாநிலத்தில் மருத்துவ வசதியை மேம்படுத்த சுகாரத்துறை அமைச்சகம் சுமார் 600 மில்லியன் நிதி ஒதுக்கியுள்ளது. பாசோக் மருத்துவமனை, கோலா கிராய் மருத்துவமனை கட்டிடம், ஜெலி மருத்துவமனை இணைப்பு கட்டிடங்கள் மற்றும் மாநிலத்தில் உள்ள சுகதார மைய மேம்பாடு ஆகிய பணிகளுக்கு இந்த நிதி பயன்படுத்தப் படும். மேலும் வெள்ளத்தால் சீரழிந்துள்ள 10 க்கும் மேலான சுகாதார மையங்களை சீர்செய்யவும் இந்த நிதி பயன்படுதப்படும் என டாக்டர் ச.சுப்ரமணியம் நிகழ்ச்சியில் தெரிவித்தார்.