டிசம்பர் 24, இந்த வருஷம் டி.எச்.ஆர் ராகா அறிவிப்பாளர் ஷாலுக்குப் பரபரப்பான கிறிஸ்மஸ் என்றுதான் சொல்லனும். டிக்காம் லூட்ஸ் என்பவரைக் கரம் பிடித்த ஷாலு இவ்வாண்டு தன்னுடைய கணவரின் குடும்பத்தோடு இணைந்து கொண்டாடுகிறார். கிறிஸ்மஸ் பண்டிக்கைக்கு முதல் நாளுக்கு முன்பு குடும்பத்தோடு சேர்ந்து தேவாலயம் சென்று பிரார்த்தனைச் செய்வோம். மறுநாள் உற்றார் உறவினர்களுடன் சுற்றுலா மேற்கொள்ள திட்டமிட்டுள்ளோம். வேலை காரணத்தால் கிறிஸ்மஸ் பண்டிக்கைக்கு முன் கூட்டியே எதுவும் தயாரிக்கல. பலகாரம், ஷாப்பிங் எல்லாமே கடைசி நேரத்தில் தான்! கடைசி நேரமானாலும் களைக் கட்டறது தானே முக்கியம். ஆக மொத்ததில் எல்லாமே தயார்!
இப்பண்டிக்கையின் போது பிரிந்த உறவுகளுடன் ஒன்று இணைந்து சேர்ந்து கொண்டாடுவோம். அதுமட்டுமின்றி, சாலையில் பயணிக்கும் போது பாதுகாப்பான பயணித்தை மேற்கொள்ளுங்கள். என்னுடைய கணவர் டிக்காம், மாமனார் மாமியார், நண்பர்களுக்கு மற்றும் கிறிஸ்மஸ் கொண்டாடும் அனைவருக்கும் என்னுடைய கிறிஸ்மஸ் வாழ்த்துகளைத்
தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த கிறிஸ்மஸ் திருநாளில் ஆதரவற்ற குழந்தைகளுக்கு பெரியவர்களுக்கு நம்மால் முடிந்த வரை உதவுகளைச் செய்து அவர்களை மகிழ்ச்சிப்படுத்துவோம் என்று கூறுகிறார் டி.எச்.ஆர் ராகா செய்தி வாசிப்பாளர் சவுரியம்மாள் ராயப்பன். அதுமட்டுமின்றி, எதிர்பாராத விதமாக உங்கள் நண்பர்களுடன் அல்லது உற்றார் உறவினர்களுடன் சண்டைகள் ஏற்பட்டிருந்தால் அவற்றையெல்லாம் மறந்து ஒற்றுமையாகக் கொண்டாடுவோம். மறப்போம் மன்னிப்போம்! அனைத்து கிறிஸ்மஸ் தின நல்வாழ்த்துகள். ஊருக்குத் திரும்புறவங்க பாதுகாப்பாக பயணம் செய்யுங்க! ராகா செய்தியை கேட்க மறக்காதீங்க!