டிசம்பர் 15, ஒரு வயது முதிர்ந்த அரசியல்வாதியாக கருதி மதிக்கவேண்டும் என்று நினைத்தால் கூட கேவியஸ் அவர்கள் வருடத்திற்கு ஒரு தடவை தந்து வாயைக் கொடுத்து புண்ணாகாமல் இருக்க மாட்டார்.
சமுதாயத்திற்கு சம்பந்தபட்ட எந்த விசயத்திலும் எந்த பிரச்சனைகளிலும் கலந்துகொள்ளாமலும் எப்பொழுதும் மிடுக்குடன் மட்டுமே திரியும் கேவியஸ் அவர்களுக்கும் எதிர்கட்சியைப் போல ம.இ.காவை தொட்டு பிரச்சாரம் செய்யாவிடில் பத்திரிக்கையின் தலையங்கத்தில் இடம் கொடுக்க மாட்டார்கள் என்பதற்காகவே ம.இ.காவை தாக்கி பேசுபவர்.
ம.இ.கா தலைவர்களை சந்திப்பது கடினாமாக இருக்கிறது எனவும் இந்தியர்களுக்க வழங்கபட்ட மானியங்கள் எங்கே எனவும் சமீபத்தில் நடந்த மைபிபிபி மாநாட்டில் விரவசனம் பேசியுள்ளார். மக்கள் எந்தவித தடையும் இன்றி ம.இ.காவின் தலைவர்கள் சந்தித்து தங்களது பிரச்சனைகளை தீர்த்துக் கொண்டு வருகின்றனர். இந்திய மக்களை பிரதிநிதிப்பேன் என்று இப்போது வசனம் பேசும் இவர், மந்திரியாக இருந்த காலத்தில் மக்கள் பிரச்சனைகளை விட அவரது அசத்தலான உடைகளிக்கு கொடுத்த முக்கியத்துவம் அதிகம்.
அரவியல் கட்சிகள் வழி நமது அரசாங்கம் ஒருபோதும் மானியங்களை வழங்கியதில்லை என்கிற விசயம்கூடவா தெரியாமல் இதுவரை அவர் ஒரு கட்சியை வழிநடத்தி வந்திருக்கிறார்?? இந்திய மக்களின் முன்னேற்றத்தை கருத்தினில் கொண்டு நமது அரசாங்கம் மானியங்களை SEED, SEDIC போன்ற அரசு இயந்திரங்கள் மூலம் வழங்கி வருவது அனைவரும் அறிந்ததே. தமிழ்ப்பள்ளிகள் தொடர்பான மானியங்களை அரசு கல்வியமைச்சு மூலமும் வழங்கிவருகிறது.
பல இனங்களை கொண்ட மைபிபிபியை இந்திர்களை பிரதிநிதிக்கும் கட்சியாக மாற்றுவேன் என்று கேவியஸ் சொல்லும் பொழுது வாய்விட்டு சிரித்துவிடலாம். அரசியல் தளத்தில் நானும் எனது கட்சியும் இருக்கிறோம் ர்ன்று காட்டிக்கொள்ள இவ்வாறு கேவியஸ் துடிக்கிறார் என்பது தெளிவாக தெரிகிறது.
தனது நாற்காலிக்கு ஆபத்து வராமல் அவரது ஹிட்லர்கார நிர்வாகத்தால் டத்தோ முருகையா, சந்திரகுமணன் போன்ற சிறந்த தலைவர்களை கட்சியை விட்டு நீக்கி பல வருடங்களாக இருக்கையை சூடாக்கி கொண்டு இருக்கிறார் என்பதை மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார். பிரதமரை விமான நிலையத்தில் பஸ் கணக்கில் சென்று சந்திப்பதை தவிற சமுதாயத்திற்கு பயன்படும் ஒரு விசயத்தையும் அவர் செய்யவில்லை. ஆக அப்படிப்பட்ட கேவியசுக்கு ம.இ.காவைப் பற்றி பேச அருகதையே இல்லை எனலாம். ஆக அடுத்தவனின் வீட்டை பற்றி குறைக் கூறும் முன் உங்களுக்கு வீடே இலை என்பதை மறந்து விடாதீர்கள்.
இறுதியாக தேசிய முன்னணியில் இரு தலைவர் என்கிற முறையில் சக கட்சியை பற்றி அவதூறு பரப்புவதை விட்டுவிட்டு அடுத்தத தேர்தலில் தேசிய முன்னணியின் வெற்றிக்கு எவ்விதம் உதவலாம் என்று யோசிப்பது ஒரு கட்சித் தலைவருக்கு அழகு. அதை விடுத்து வீண் விளம்பரத்திற்காக இன்னும் ஒரு முறை ம.இ.காவை சீண்டினால் நிலைமை விபரீதமாகும் என எச்சரிக்கிறேன்.