குறைந்தபட்ச ரெயில் கட்டணம் ரூ.5–ல் இருந்து ரூ.10 ஆக உயர்கிறது

Online-Tamil-News-Malaysia

Online-Tamil-News-Malaysia

நவம்பர் 18, குறைந்தபட்ச ரெயில் கட்டணம் 20–ந்தேதி முதல் ரூ.5–ல் இருந்து ரூ.10 ஆக உயர்கிறது. இது புறநகர் ரெயில்களுக்கு பொருந்தாது. நடைமேடை டிக்கெட் ரெயில் நிலையங்களில் பயணிகளுக்கு இடையூறாக நடைமேடையில் அதிக கூட்டம் கூடுவதை தவிர்ப்பதற்காக நடைமேடை டிக்கெட் கட்டணம் ரூ.5–ல் இருந்து ரூ.10 ஆக உயர்த்தி மத்திய ரெயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. அதன்படி கடந்த ஏப்ரல் மாதம் முதல் இந்த கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால் இதன் நோக்கம் பல இடங்களில் நிறைவேறவில்லை. இதற்கு காரணம் புறநகர் அல்லாத ரெயில்களில் 2–ம் வகுப்பு குறைந்தபட்ச கட்டணம் ரூ.5 ஆக உள்ளது.  சிலர் நடைமேடை டிக்கெட்டுகள் வாங்குவதற்கு பதிலாக இந்த 5 ரூபாய் டிக்கெட்டுகளை வாங்கிக்கொண்டு ரெயில் நிலையங்களின் நடைமேடைக்கு வருவதாக தெரியவந்தது. இதனால் குறைந்தபட்ச ரெயில் கட்டணத்தை ரூ.5–ல் இருந்து ரூ.10 ஆக, அதாவது நடைமேடை டிக்கெட் கட்டணத்துக்கு இணையாக உயர்த்த ரெயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளதாக அதிகாரி ஒருவர் கூறினார்.