மெக்கா மசூதி விபத்து உயர்மட்ட விசாரணை நடத்த சவுதி இளவரசர் உத்தரவு

மெக்கா மசூதி விபத்து உயர்மட்ட விசாரணை நடத்த சவுதி இளவரசர் உத்தரவு

me

செப்டம்பர் 25, மெக்கா மசூதி ஹஜ் பயணிகள் 717 பேர் பலியான சம்பவம் தொடர்பாக உயர்மட்ட விசாரணை நடத்த சவுதி அரேபியா அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த ஆண்டு ஹஜ் பயணம் 20 லட்சத்திற்கும் அதிகமானோர் மேற்கொண்டனர். சாத்தான் மீது கல் எறியும் நிகழ்ச்சியில் பங்கேற்க மெக்கா நகரில் இருந்து ஒரே நேரத்தில் ஹஜ் ஜமாத்துக்கு புறப்பட்டதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் சிக்கி சுமார் 717 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். 1000க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோல் மலேசியா மற்றும் இந்தோனேஷியாவை சேர்ந்தவர்கள். கடந்த 25 ஆண்டுகளில் மெக்காவில் நடைபெற்ற மிக மோசமான விபத்து இது. விபத்து குறித்து உயர்மட்ட விசாரணை நடத்த சவுதி இளவரசரும், ஹஜ் கமிட்டி தலைவருமான முகமது பின் நயிப் உத்தரவிட்டுள்ளார்.