டிசம்பர் 11, இது நம்ம ஆளு’ படப்பிடிப்பில், ‘வல்ல வன்’ படத்தில் காட்டிய நெருக்கத்தை மீண்டும் காட்டியிருக்கிறதாம் சிம்பு-நயன் ஜோடி. இன்னொரு ஹீரோயினாக ஆண்ட்ரியா நடித்தாலும், நயன்தாராவின் கேரக்டருக்குத்தான் அதிக முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார் சிம்பு. சமீபத்தில் நயன்தாரா மாலத்தீவில் பிறந்த நாள் கொண்டாடினார்.
அவரை வாழ்த்தி மெசேஜ் அனுப்பிய சிம்பு, இந்தமுறை கிஃப்ட் எதுவும் தரவில்லையாம். காரணம், ஆன்மிகத்தில் கவனம் செலுத்தி வரும் அவர், அடுத்து எந்த நடிகையும் தன் வாழ்க்கை யில் குறுக்கிடக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறாராம்.