டிசம்பர் 1, ஐக்கிய அரபு குடியரசின் 43வது தேசிய தின கொண்டாட்டங்களை முன்னிட்டு பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நாடெங்கும் நடைபெற்று வருகின்றன. இதில் துபாய் சர்வதேச விமான நிலையத்தின் டெர்மினல் 3 பகுதியில் 13.5 மீட்டர் உயரத்தில் முழுக்க சாக்லேட்டால் தயார் செய்யப்பட்ட உலகின் உயரமான கட்டிடமான துபாய் ‘புர்ஜ் கலிபா’ போன்ற மாதிரி கட்டிடம் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.இரண்டு வார காலம் இந்த சாக்லெட் கட்டிடம் மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கும் என தெரிவிக்கபபட்டுள்ளது. இந்த சாக்லெட் கட்டிடத்தை புகழ்பெற்ற சாக்லெட் பொருளகள் தயாரிப்பு நிபுணர் ஆன்ட்ரிவ் பருகியா தலைமையிலான குழுவினர் தயாரித்துள்ளார் .இதனை தயாரிக்க 4ஆயிரத்து 200 கிலோ பெல்ஜியம் சாக்லெட் பயன்படுத்தப்பட்டு 1050 மணி நேரத்தில் இதனை தயாரித்துள்ளனர்.
உலகின் உயரமான கட்டிடம், உலகின் மிகவும் பிஸியான இரண்டு விமான நிலையங்கள், உலகின் மிக பெரிய சாப்பிங் மால் என உலகளவில் பல்வேறு சிறப்பமசங்களில் துபாய் முதலிடம் பெற்றுள்ளது. எனவே தேசிய தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக உலகளவில் பார்வையாளர்களை கவரும் வகையில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாக தகவல் தொடர்பு மற்றும் வர்த்த மேம்பாட்டின் துணை தலைவர் அனிதா மெஹ்ரா கூறினார்.