பீகார் மாநிலத்தில் அப்துல் கலாம் பெயரில் வேளாண்மை கல்லூரி

பீகார் மாநிலத்தில் அப்துல் கலாம் பெயரில் வேளாண்மை கல்லூரி

apj-abdul-kalam

ஜூலை 31, மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமுக்கு பீகார் மந்திரி சபையில் இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது. மந்திரிகள் அனைவரும் எழுந்து நின்று 2 நிமிடம் அஞ்சலி செலுத்தினர். பீகார் அரசு 2 முக்கிய திட்டத்தை அறிமுகப்படுத்தியது.

பீகாரின் கிஷன்கஞ்ச் பகுதியில் இருக்கும் வேளாண்மை கல்லூரிக்கு முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் பெயரை சூட்ட முடிவு செய்யப்பட்டது. அதன்படி அந்த கல்லூரி இனிமேல் ‘டாக்டர் கலாம் வேளாண்மை கல்லூரி, கிஷன்கஞ்ச்’ என அழைக்கப்படும்.

இதைப்போல பாட்னாவுக்கு அருகே மாநில அரசு அமைக்க உத்தேசித்துள்ள அறிவியல் நகரத்துக்கு, ‘டாக்டர் அப்துல் கலாம் அறிவியல் நகரம்’ என பெயர் சூட்டவும் மந்திரி சபை ஒருமனதாக முடிவு செய்தது.