ஜூலை 16, மலேசிய திருநாட்டில் நோன்புப் பெருநாள் கொண்டாடும் அனைத்து முஸ்லிம் சகோதரர் சகோதரிகளுக்கும் ம.இ.கா இளைஞர் பிரிவின் எங்களது இனிய நோன்பு பெருநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
ஒரு மாதம் நோன்பிருந்து உடல் உள்ளம் அனைத்தும் புதுப்பித்து ஒரு புது மனிதராக மீண்டும் பிறப்பெடுத்த நமது முஸ்லீம் நண்பர்கள் அனைவருக்கும் எங்களது வாழ்த்துகள். அறிவியல்பூர்வமாக பார்த்தால் இந்த ஒரு மாத நோன்பு உங்கள் உடல் உறுப்பிகளை சுத்தம் செய்யயும் உதவுகின்றது. ஆக ஆன்மிக ரீதியிலும் அறிவியல் ரீதியலும் இந்த நோன்பு நமது முஸ்லிம் நண்பர்களுக்கு நன்மையே வழங்கியுள்ளது.
நம் நாட்டு மக்களிடையே இருக்கும் ஒற்றுமைக்கு பங்கம் விளைவிக்க பல கெட்ட விசயங்கள் தொடர்ந்து நடைப்பெற்று வருகிறது. நமது ஒற்றுமையை பறைசாற்ற இதுதான் சரியான தருணம். நமது ஒற்றுமையை வெளிப்படுத்தி, இனம், மொழி, மதம் கடந்து நாம் அனைவரும் மலேசியர்கள் என்பதனை உரக்க கூறும் நேரம் இது. இந்த நோன்பு பெருநாளை முஸ்லிம் நண்பர்களின் பெருநாள் என்று தள்ளிவைக்காமல் நாம் அனைவரும் மலேசியர்களாக ஒன்றுக் கூடி கொண்டாடி நமது ஒற்றுமையை உலகிற்கு காட்ட வழிவகுக்கும் ஒரு திருநாள் இது.
மீண்டும் அனைவருக்கும் எங்களது செலமாட் ஹரிராயா, உங்களுக்கு எல்லாம் வல்ல இறைவன் அனைத்து செல்வங்களும் அருள இந்த புனித நாளில் நான் இறைவனை வேண்டுகிறேன். வாகனத்தை செலுத்தபோது கவனமாக செலுததுங்கள். நன்றி.