மே 15, நெல்லை மாவட்டம், கூடங்குளம் அணுமின் நிலையத்தில் கடந்த 9ம் தேதி மாலை 6.40 மணியளவில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக மின் உற்பத்தி திடீரென்று நிறுத்தப்பட்டது. நீராவியை குளிர்விப்பதற்கான தண்ணீர் செல்லும் குழாய் வழிப்பாதையில் பழுது ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அதை சரி செய்யும் பணி நடந்தது.
இதைத்தொடர்ந்து முதலாவது அணு உலையில் நேற்று அதிகாலை 4.47 மணிக்கு மீண்டும் மின் உற்பத்தி துவங்கியது. காலை 6 மணியளவில் 130 மெகாவாட்டில் துவங்கிய மின் உற்பத்தி படிப்படியாக அதிகரித்து 700 மெகாவாட்டை எட்டியது.