ஏப்ரல் 8, திருப்பதி அருகே வனப்பகுதியில் நேற்று அதிகாலை செம்மரக்கட்டை கடத்த முயன்றதாகக் கூறப்படும் கும்பல் மீது சிறப்பு அதிரடிப்படை போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் வேலூர், திருவண்ணாமலையைச் சேர்ந்த 20 தொழிலாளர்கள் பரிதாபமாக பலியாயினர். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திட்டமிட்டு கொடூரமாக 20 தொழிலாளர்களை சுட்டுக் கொன்ற சம்பவம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று தமிழக அரசியல் கட்சிகள் வலியுறுத்தி உள்ளன. ஆந்திர மாநிலம் சித்தூர், கடப்பா, கர்னூல் ஆகிய 3 மாவட்டங்களை உள்ளடக்கியது சேஷாசலம் வனப்பகுதி. இங்கு செம்மரங்கள் அதிகளவில் வளர்ந்துள்ளன. இந்த செம்மரங்களை கடந்த 10 ஆண்டுகளாக மர்ம கும்பல்கள் வெட்டி வாகனங்கள் மூலமாக தமிழகம், கர்நாடகா உள்பட பல்வேறு மாநிலங்கள் மட்டுமின்றி சிங்கப்பூர், மலேசியா போன்ற வெளிநாடுகளுக்கும் கடத்தி செல்கின்றன.
ஆந்திர போலீஸ் என்கவுன்டர் 20 தமிழர்கள் சுட்டுக்கொலை
