ம.இ.கா விவகாரம் தொடர்பாக துணை கல்வி அமைச்சர் கமலநாதன் கருத்து

ம.இ.கா விவகாரம் தொடர்பாக துணை கல்வி அமைச்சர் கமலநாதன் கருத்து

kamala

ஜனவரி 29, இந்த விவகாரம் தொடர்பாக மத்திய செயற்குழு உறுப்பினரும் துணை கல்வி அமைசருமான திரு . கமலநாதன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் ம இ கா தலைமை இந்த விவகாரத்தில் உடனடியாக தலையிட்டு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில் ம இ கா தலைவர் டத்தோ பழனிவேல் அவர்கள் கட்சிக்காகவும் இந்திய வம்சாவழியினரின் நலன் கருதியும் தனது தன்னிச்சையான நடவடிக்கைகள் அனைத்தையும் நிறுத்திவிட்டு கட்டியின் செயற்குழுவை கூட்டி பிரச்சனைக்கான முடிவை எடுக்க வேண்டும் என்றார்.  கடந்த டிசம்பர் 18 தேதி செயற்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட கூட்டு முடிவுகளை அமுல்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். முன்னதாக டிசம்பர் 18 ஆம் தேதி செயற்குழு கூட்டத்தில் தலைவர், துணை தலைவர் மற்றும் இரண்டு தரப்பிலிருந்தும் தலா 5 நபர்கள் அடங்கிய ஒரு சிறப்புக் குழுவை அமைப்பது என முடிவு எடுக்கப்பட்டது எனவும் அந்த வாக்குறுதியை ம இ கா தலைவர் நிறைவேற்ற தவறிவிட்டார் எனவும் திரு. கமலநாதன் தெரிவித்தார்.  தேர்தல் ஆணையத்தில் கட்டளைப்படி உடனடியாக கட்சியினரின் பல்வேறு பதவிகளுக்கு தேர்தல் நடத்த வேண்டும் எனவும் அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.