என் தமிழ்

வாகனம் கழுவும் இடத்தில் வேலைச் செய்து வந்த 16 வயது சிறுவன் அடித்துக் கொலை

death (1)

ஜனவரி 22, ஜோர்ஜ்டவுன்-சக நண்பர்களால் மின்சாரக் கம்பியால் அடித்துக் கொலைச் செய்யப்பட்ட 16 வயதுச் சிறுவன் பரிதாபமாக உயிர் இழந்தான்.
நேற்று இரவு 7.30மணி அளவில் வாகனம் கழுவும் இடத்தில் வேலைச் செய்து வந்த 16 வயது முனிஸ்வரன் எனும் சிறுவன் அதே கடையில் வேலைச் செய்த சக நண்பர்களால் அடித்துக் கொலைச் செய்யப்பட்டுள்ளான்.
இக்கொலைத் தொடர்பான விசாரணையின் போது நண்பர்களின் பொருட்களைத் திருடியதால் பழி வாங்குவதற்காக முனிஸ்வரனை சக நண்பர்கள் மின்சாரக் கம்பியால் அடித்துக் கொலைச் செய்ததாகத் தெரிய வந்துள்ளது இக்கொலைக்குச் சம்பந்தமாக முனிஸ்வரனுடன் வேலைச் செய்து வந்த மேலும் ஒரு சிறுவனைப் போலீஸ் கைதுச் செய்துள்ளனர்.
கொலைச் செய்யப்பட்ட இச்சிறுவன் ஆதரவற்றோர் இல்லத்தில் வசித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Scroll to Top