சீனாவில் நிலச்சரிவு:

சீனாவில் நிலச்சரிவு:

chinaa

சீனாவின் யுனான் மாகாணத்தில் புகாங் மாவட்டம் ஷவா கிராமத்திலும், மின்சு கிராமத்திலும் நேற்று முன்தினம் நள்ளிரவு கனமழை பெய்தது. இதன் காரணமாக கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் நுஜியாங் ஆற்றில் இருந்து 500 மீட்டர் தொலைவில் உள்ள பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பலர் சிக்கினர்.

தகவல் அறிந்ததும் 140க்கும் மேற்பட்ட மீட்புக்குழுவினர் விரைந்து சென்று நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். அதில் ஆறு பேர் சடலமாக மீட்கப்பட்டனர். மேலும் 25 பேரை காணவில்லை என்று தெரிய வந்துள்ளது. இதில் சிலர் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டு இருக்கலாம் எனவும் சிலர் மண்ணில் புதைந்து இருக்கலாம் என்று  அஞ்சப்படுகிறது. 

மாயமானவர்களை தேடும்பணியை முடுக்கி விட்டுள்ள சீன அரசு சம்பவ இடத்திற்கு ஆம்புலன்ஸ் வாகனங்கள், தீயணைப்பு வண்டிகள், மண் அள்ளும் ராட்சத இயந்திரங்களையும் அனுப்பி உள்ளது