நித்யானந்தா ஆசிரமத்தில் பெண் மர்ம சாவு: உடல் மறு பிரேத பரிசோதனை செய்யப்படும்

நித்யானந்தா ஆசிரமத்தில் பெண் மர்ம சாவு: உடல் மறு பிரேத பரிசோதனை செய்யப்படும்

nithyananda-Umbrella

ஜனவரி 7, திருச்சி நவலூர் குட்டப்பட்டு மேலத்தெருவை சேர்ந்தவர் அர்ஜுனன். இவரது மனைவி ஜான்சிராணி. இவர்களது மகள் சங்கீதா (24). பெங்களூரு பிடதியில் உள்ள நித்யானந்தா ஆசிரமத்தில் தங்கி பணியாற்றி வந்தார். கடந்த 2014 டிசம்பர் 28ம் தேதி ஆசிரமத்தில் இருந்து சங்கீதாவின் தந்தைக்கு ஒரு அழைப்பு வந்தது. அப்போது சங்கீதா உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அதனால் உடனே புறப்பட்டு பெங்களூரு வரவும் என்று கூறினர்.
இதையடுத்து சங்கீதாவின் பெற்றோர் பெங்களூரு சென்றபோது, சங்கீதா இறந்துவிட்டார் என்று கூறினர். அதன்பின் அவரது உடல் திருச்சி கொண்டு வரப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. இதனிடையே, சங்கீதாவின் தாயார் ஜான்சிராணி தனது மகள் சாவில் மர்மம் இருப்பதாக ராம்ஜிநகர் போலீசில் புகார் அளித்தார். புகாரின்பேரில் பிடதி ஆசிரமம் அமைந்துள்ள ராம்நகர் போலீசார் நேற்று திருச்சி ராம்ஜிநகர் போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்தனர். பின்னர் சங்கீதாவின் உடலை தோண்டி எடுத்து மறு பிரேத பரிசோதனை செய்ய ஆர்டிஓ மனோகரனிடம் அனுமதி கேட்டனர். அவர் அனுமதி தர மறுத்ததை அடுத்து, திருச்சி கலெக்டர் பழனிச்சாமியிடம் அனுமதி கோரி சென்றனர். அனுமதி கிடைத்ததும் இன்று காலை சங்கீதாவின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு மறு பிரேத பரிசோதனை செய்யப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.