ஜனவரி 2, ஆதாயம் கிடைக்கிறது என்பதற்காக மரங்களை விருப்பம்போல் வெட்டிச் சாய்க்கக் கூடாது; சுற்றுச்சூழலைப் பொறுத்தவரை அனைவரும் கூடுதல் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் எனப் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் நினைவுறுத்தியுள்ளார்.
“மரங்களை ஆதாயம்தரும் பொருள்களாகப் பார்க்காதீர்கள். மரங்களுக்கென பணிகள் உண்டு. இயற்கை அன்னைக்குத் துரோகம் இழைத்தால் இதுபோன்ற பேரிடரைத்தான் எதிர்நோக்க வேண்டியிருக்கும்”, என்றாரவர்.
நாட்டில் வெள்ளப் பிரச்னைகளைத் தீர்ப்பதற்கு குறுகிய-காலத் திட்டம், நீண்ட-காலத் திட்டம் எனச் செய்ய வேண்டியது நிறைய உள்ளதாக பிரதமர் கூறினார்.