டிசம்பர் 30, போக்குவரத்து ஊழியர்களின் வேலை நிறுத்த போராட்டம் 3-வது நாளாக நீடிப்பதால் சென்னையில் குறைவான அளவு பேருந்துகளே இயக்கப்படுகின்றன. இதனால் பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஞாயிற்றுகிழமை தொடங்கிய போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் இன்று 3-வது நாளை எட்டியுள்ளது. இதனால் சென்னை நகரில் குறைந்த எண்ணிக்கையில் மாநகர பேருந்துகள் இயக்கப்பட்டன. புறநகர் பகுதிகளான தாம்பரம், குரோம்பேட்டை, வேளச்சேரி, ஆலந்தூர், பூந்தமல்லி, உள்ளிட்ட பகுதிகளிலும் குறைவான பேருந்துகளே இயக்கப்பட்டதால் பயணிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.
பேருந்துக்காக பொதுமக்கள நீண்ட நேரம் காத்திருக்க நேரிட்டது. கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து வெளியூர்களுக்கும் பேருநுதுகள் சரிவர இயங்காததால் வெளியூர் செல்லும் பயணிகள் சிரமபட்டனர். நேற்றிரவு பெய்த அடைமழையால் ஆட்டோக்கள் மற்றும் ஷேர் ஆட்டோக்கள் கூட கிடைக்காமல் மக்கள் பாதிக்கப்பட்டனர்.
இதனிடையே வேலை நிறுத்த போராட்டத்தை தீவிரபடுத்த தொழிற்சங்கங்கள் முடிவு செய்திருப்பதால் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் மற்றும் மாநகர போக்குவரத்து கழக பணிமணைகளில் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.