டிசம்பர் 9, தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் நடித்துவந்த சுவேதா பாசு விபசாரத்தில் ஈடுபட்டதாக ஐதராபாத்தில் கைது செய்யப்பட்டார். அவரை மகளிர் காப்பகத்தில் தங்கி இருக்க ஐதராபாத் செசன்ஸ் கோர்ட் உத்தரவிட்டது. மாதக் கணக்கில் அங்கு தங்கி இருந்தார். மகளிர் காப்பகத்திலிருந்து மகளை விடுவித்து என்னுடன் தங்கி இருக்க அனுமதிக்க வேண்டும் என்று சுவேதாவின் தாயார் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இதையடுத்து காப்பகத்திலிருந்து அவரை கோர்ட் விடுவித்தது. இந்நிலையில் சுவேதா பாசு குற்றமற்றவர் என்று கோர்ட் உத்தரவிட்டதுடன், அவர் மீது கூறப்பட்ட குற்றச்சாட்டுகளை தள்ளுபடி செய்துள்ளது. இதுகுறித்து சுவேதா கூறும்போது, ‘இந்த புகாரிலிருந்து நான் விடுவிக்கப்பட்டிருப்பது எனக்கும் என் குடும்பத்தாருக்கும் பெரிய நிம்மதியை தந்திருக்கிறது. என் மீதான் எல்லா குற்றச்சாட்டுகளையும் கோர்ட் நிராகரித்திருக்கிறது. இது எனக்கிருந்த குற்ற உணர்வை தீர்த்துவிட்டது. பல மாதங்களுக்கு பிறகு முதன்முறையாக இப்போதுதான் எனது பெற்றோர் முகத்தில் புன்னகையை பார்க்க முடிந்தது’ என்றார்.சமீபத்தில் பாலிவுட் தயாரிப்பாளர் அனுராக் கஷ்யாப் பட நிறுவனத்தில் கதை ஆலோசகர் குழுவில் சேர்ந்தார். அத்துடன் ஒன்றிரண்டு படங்களில் நடிக்கவும் அவருக்கு அழைப்பு வந்திருக்கிறது.
சுவேதா பாசு வழக்கில் திருப்பம்
