நவம்பர் 30, வடக்கு ஐரோப்பியாவில் உள்ள பால்டிக் கடலில் உள்ள நாடுகளில் ஒன்று லித்வேனியா. இது கடந்த 2004-ஆண்டு ஐரோப்பிய யூனியனுடன் இணைந்தது. வரும் ஜனவரி 1-ந்தேதி முதல் இங்கு யூரோ பயன்படுத்தப்பட இருக்கிறது. இதனால், லிட்டாஸ் இனிமேல் பயன்படாது. ஆகவே, நமது நாட்டின் பணம் உலக அளவில் நினைவில் இருக்க வேண்டும் என்று எண்ணிய அந்நாட்டின் 26 வயது இளைஞன் டாமஸ் ஜோகுபாவ்ஸ்கிஸ் லிட்டாஸ் நாணயங்களை கொண்டு பெரிய பிரமிட்டை உருவாக்க எண்ணினார்.
இதற்கான ஒரு மில்லியன் நாணயங்களை சேகரித்து ஒருவாரம் செலவழித்து 1 மீட்டர் உயரமுள்ள பிரமிட்டை உருவாக்கினார். இதற்காக செலவழிப்பட்ட நாணயத்தின் மொத்த தொகை சுமார் இரண்டு லட்சத்து 83 ஆயிரம் ரூபாய் ஆகும்.
இதுகுறித்து அந்த இளைஞன் கூறும்போது, ‘‘இதற்கு முன்னதாக 6 லட்சம் நாணயங்களை கொண்டு பிரமிட் உருவாக்கப்பட்டது. அந்த உலக சாதனையை நாங்கள் எப்படியும் முறியடித்து விடுவோம் என்று உறுதியாக இந்த முயற்சியை எடுத்து 10 லட்சம் நாணயங்களை வைத்து உருவாக்கினோம்.’’ என்றார்.
இதில் பயன்படுத்தபட்ட நாணயங்கள் இறுதியில் குழந்தைகள் தொண்டு நிறுவனத்திற்கு நன்கொடையாக அளிக்கப்பட இருக்கிறது.