நவம்பர் 28, முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த உச்சநீதிமன்றம் கடந்த மே 7ம் தேதி உத்தரவிட்டது. அணைப்பகுதியில் தமிழக பொதுப்பணித்துறையி னர் மராமத்து பணிகள் மேற்கொள்ளும் போது, அவர்களுக்கு கேரள அரசு எவ்வித இடையூறும் செய்யக்கூடாது என்றும் தெரிவித்துள்ளது. சில தினங்களுக்கு முன் உச்ச நீதிமன்ற உத்தரவின்படி மராமத்து பணிகளுக்காக படகுத்துறை வழியாக அணைப்பகுதிக்கு கொண்டு சென்ற மின்சாதன பொருட்களையும் ஒருநாள் முழுவதும் படகுத்துறையில் அனுமதிக்க மறு த்து கேரள வனத்துறையினர் நிறுத்தினர்.
நேற்று அலுவல் பணிக்காக பெரியாறு அணைக்கு தமிழக பொதுப்பணித்துறை படகில் செல்ல, படகுத்துறைக்கு தமிழக உதவி செயற்பொறியாளர் சவுந்தரம் மற்றும் தமிழக அதிகாரிகள் சென்றனர். இவர் களை படகுத்துறை நுழை வாயிலில் கேரள வனத்துறையினர் அனுமதிக்க மறுத்துள்ளனர். இதுகுறித்து தமிழக அதிகாரிகள் கேட்டபோது, கடந்த இரு தினங்களுக்கு முன் மத்திய தொழில் பாதுகாப்பு படை கமாண்டோ அணைக்கு சென்றதை தமிழக அதிகாரிகள் கேரள வனத்துறையிடம் சொல்லவில்லை என்று கூறி உள்ளனர்.
‘மத்திய அரசு சார்பில் வந்த அவர்களை அழைத்து செல்ல யாரிடமும் அனுமதி பெற வேண்டியதில்லை’ என தெரிவித்த தமிழக அதிகாரிகளிடம், ‘அப்படியானால் நீங்கள் அணைக்கு செல்ல எங்கள் உயரதிகாரியான பெரியாறு புலிகள் சரணாலய இணை இயக்குநரை சந்தித்து அனுமதி வாங்கி வாருங்கள்’ என கூறி உள்ளனர். சுமார் மூன்று மணிநேரம் கழித்து புலிகள் சரணாலய இணை இயக்குநர் சஞ்சயன்குமாரின் அனுமதி கிடைத்த பிறகே தமிழக அதிகாரிகளை அணைப்பகுதிக்கு செல்ல அனுமதித்துள்ளனர்.
இதுகுறித்து பெரியாறு அணை மீட்புக்குழு தலைவர் ரஞ்சித்குமார் கூறகையில், ‘இணை இயக்குநர் பெரியாறு புலிகள் சரணாலயப்பகுதியை தனது சொத்தாக நினைத்துக் கொண்டுள்ளர். அதனாலேயே அவரது உத்தரவின் பேரில் அணைப்பகுதிக்குச் செல்லும் தமிழக அதிகாரிகளை வேண்டும் என்றே அலைக்கழிப்பது, தடுப்பது, காக்க வைப்பது என வனத்துறையினர் செய்து வருகின்றனர். கேரள வனத்துறையினர் இந்த செயலை இத்தோடு நிறுத்திக் கொள்ளவேண்டும். மீண்டும் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டால் கேரள வனத்துறையினரை கண்டி த்து எல்லைப்பகுதியில் மக்களை திரட்டி போராட்டம் நடத்துவோம்,