என் தமிழ்

கேங் மாமாக் எனப்படும் குண்டர் கும்பலை அழிக்க போலீசார் தீவிரம்

police belasah

நவம்பர் 27, கிள்ளானில் “கேங் மாமாக்” எனப்படும் குண்டர் கும்பலை அழிக்க போலீசார் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளனர்.
அதன் முதற்கட்டமாக, தாமான் மெலாவாத்தியில் தீவிர நடவடிக்கை நடந்ததில் இரண்டு குற்றவாளிகளும் ஒரு போலீசாரும் துப்பாக்கிச் சூட்டுக்கு ஆளாகியிருப்பதாக குற்ற புலனாய்வுத் துறையின் முதன்மை அதிகாரி முகமது காலில் காதீர் முகமது தெரிவித்துள்ளார்.
இந்த தீவிர கண்காணிப்பு அந்த கும்பலை ஒழிக்க மட்டுமல்லாமல் அக்கும்பலிலுள்ள ஓவ்வொரு நபரின் குற்ற பின்னணியையும் அறிந்துக் கொள்வதற்கும் என அம்பாங் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கும் துப்பாக்கி சூட்டில் பாதிக்கப்பட்ட போலீசாரைப் பார்க்க வந்த காலில் கூறினார்.
போலீசாரின் இந்த அதிரடி நடவடிக்கையில், “கேங் மாமாக்” கும்பலில் ஒருவரான 59 வயது நிறைந்த ஆடவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் அக்கும்பலில் உள்ள ஒருவரின் இடுப்பு பகுதியில் துப்பாக்கிச் சூடு பட்டு கடும் காயம் அடைந்திருப்பதாக காலில் மேலும் கூறினார்.

Scroll to Top