ஆசிரமம் அம்பிகைபாகனின் வீட்டு சொத்தா: பினாங்கு துணை முதல்வர்

ஆசிரமம் அம்பிகைபாகனின் வீட்டு சொத்தா: பினாங்கு துணை முதல்வர்

vik

நவம்பர் 19, இந்தியர்களின் பாரம்பரிய அடையாளங்களில் பிரதான சின்னமாக இருக்கும் விவேகானந்தா ஆசிரமம் டான் ஸ்ரீ அம்பிகை பாகனின் பாட்டன் வீட்டு சொத்தா, அதை விற்க நினைக்கிறார் என பினாங்கு மாநில துணை முதல்வர் பேராசிரியர் ராமசாமி நேற்று கேள்வி எழுப்பினார்.

பிரிக்பீல்ட்ஸ் வட்டாரத்தில் 110 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த ஆசிரமத்தை தொடர்ந்து நடத்துவதற்கு நிதி வலிமை இல்லை என்பதை காரணம் காட்டி அதை தனியார் மேம்பாட்டு நிறுவனத்திடம் விற்க ஆசிரமத்தின் அறவாரியக் குழுவினர் முடிவெடுத்த செய்தி நாடு முழுவதும் காட்டுத் தீ போல பரவி இந்தியர் மனதில் கொந்தளிப்பை ஏற்படுத்தி வருகிறது.