நவம்பர் 18, எனக்கு திருமண நிச்சய தார்த்தம் நடக்கவில்லை. நிச்சயதார்த்தம் நடந்ததாக வெளியான செய்தி வதந்திதான். இந்த வதந்தி எங்கிருந்து கிளம்பியது என்று தெரியவில்லை. என் திருமண நிச்சயதார்த்தம் என்பது என்னுடைய வாழ்க்கையில் ஒரு முக்கியமான நாளாக இருக்கும். அதை சந்தோஷமாக அறிவிக்கும் முதல் ஆளாக நான் இருப்பேன்.
பாலகிருஷ்ணாவுடன் தெலுங்கு படமொன்றில் நடித்து வருகிறேன். இதன் படப்பிடிப்பு அரக்கு வேலியில் நடந்தது. அந்த படப்பிடிப்பில் பங்கேற்று நடித்து கொண்டு இருந்த எனக்கு நிச்சயதார்த்தம் எப்படி நடந்து இருக்க முடியும்.
இவ்வாறு திரிஷா கூறினார்.