நவம்பர் 13, உலகில் அதிகப்படியாக இருசக்கர வாகனங்களை பயன்படுத்தும் நாடுகளில் நெதர்லாந்தும் ஒன்றாகும். அந்நாட்டில் இரு சக்கர சாலை ஒன்றில் உலகில் முதல் முறையாக இரு சக்கர வாகன சாலை சோலார் சாலை அமைக்கப்பட்டது. சுமார் 70 மீட்டர் தூரத்திற்கு அமைக்கப்பட்ட சோலார் தகடுகள் பதிக்கப்பட்டுள்ள இச்சாலை மூலம் குறிப்பிட்ட அளவு மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வாகனங்கள் இந்த சாலையில் செல்லும்போது தகுந்த பிடிமானம் கிடைக்குமாறும் தவிர, உராய்வு சத்தம் அதிகமிள்ளதாவறு அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாகனம் ஓட்டிச் செல்லும்போது, சற்று தொலைவு முன்னால் சாலை சேதம் அடைந்திருந்தாலோ விபத்து ஏற்பட்டிருந்தாலோ வாகன ஓட்டிகளுக்கு அபாய விளக்கு மூலம் எச்சரிக்கை செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்நாட்டில் இரு சக்கர வாகனங்கள் அதிகப்படியாக உள்ளதால் படிபடியாக இதுபோன்ற முயற்சிகள் அதிகரிக்கப்படும் எனவும் இதற்கான ஆராய்ச்சி மற்றும் செயல்பாடுகளுக்கு 3.7 மில்லியன் யூரோ செலவாகியுள்ளதாகவும் செய்தி தொடர்பாளர் ஜன்னமிக்கெ வன் டிரேன் தெரிவித்தார்.
மேலும் எதிர் காலங்களில் வாகன ஓட்டுநர்கள் தங்களது மின்னனு வாகனங் களுக்கு தேவையான மின்சாரத்தை இதுபோன்ற சாலைகளிலிருந்து சார்ஜ் செய்து (Recharge) கொள்ளலாம்.