நவம்பர் 6, ஜொகூர் நியூயார்க் ஹோட்டலில் நடைபெற்ற ஜிஎஸ்டி எனப்படும் பொருள் சேவை வரி விளக்கக்கூட்டத்தை தமிழில் ஏற்பாடு செய்திருந்த ஜொகூர் மாநில இந்திய தொழிலியல் வர்த்தக சங்கத்தின் பணி பாராட்டுக்குரியது என தெரிவித்தனர். நிகழ்வுக்கு உறுதுணையாக பணியாற்றிய மாசாய் இந்தியர் சமூக நல இயக்கத்தின் மகளிர் பிரிவினர்.
ஜொகூர் மாநில இந்தியர் தொழிலியல் வர்த்தக ஏற்பாட்டிலும் மலேசிய இந்திய தொழிலியல் வர்த்தக சங்கத்தின் துணையுடனும், மலேசிய நிதி அமைச்சின் ஆதரவிலும் நடைபெற்ற பொருள் சேவைவரி குறித்த விளக்கம், தமிழில் வழங்கப்பட்டது மகிழ்ச்சியை அளித்தது என்று ஜிஎஸ்டி விள்க்கக்கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தெரிவித்தனர்.