நேற்றிரவு, கேமரன் மலை, ரிங்லட்டில் நிகழ்ந்த நிலச்சரிவு, மற்றும் வெள்ளப்பேரிடரால் இதுவரை 20 வீடுகளும், 20 கார்களும் சேதமடைந்துள்ளன.
சம்பவம் நிகழ்ந்த பகுதியில், ரிங்லட் ஆற்றுக்குப் பக்கத்தில் உள்ள வீடுகளும், அங்கு நிறுத்தப்பட்ட கார்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக கேமரன் மலை மாவட்ட துணை சுப்ரிடெண்டன் வான் முகமது சாஹாரி வான் புசு தெரிவித்தார்.
இதனையடுத்து சம்பந்தப்பட்ட பகுதியில் வசித்த 26 குடும்பங்கள் ரிங்லட் பொதுமண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். எங்களுக்கு நடந்த சம்பவம் குறித்து மாலை 6.30 மணிக்கு தகவல் கிடைத்தது. ரிங்லட் ஆற்றில் நீர் கரை புரண்டு ஓடியதையடுத்து 41 குடும்பங்களைச் சேர்ந்த 177 பேர் அதே மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.