அஞ்சான்’ படத்தின் புரமோஷனுக்கான சந்திப்பில் திடீரென்று மீடியாவிடம் பேசிய சமந்தா, அப்போது சொன்ன கருத்துகள் எல்லாம் வெவ்வேறு வடிவில் பிரசுரமாகி வம்பு வளர்ந்ததால், இப்போது ‘கத்தி’ பட புரமோஷனில் பங்கேற்க மாட்டேன் என்று கறாராக சொல்லிவிட்டாராம். மேலும், தன் மனதுக்குப் பிடித்த ஹீரோ சித்தார்த் பற்றியே அனைவரும் கேள்வி கேட்பதால் டென்ஷனான அவர், சித்தார்த் நடித்துள்ள ‘எனக்குள் ஒருவன்’ ஆடியோ விழாவில் பங்கேற்றதற்கான காரணத்தை சொல்லவும் தயங்குகிறாராம்.
தெலுங்கில் அவர் பிஸியாக இருந்தாலும், தமிழில் நடிக்க அதிக ஆர்வம் காட்டுகிறார். தற்போது விக்ரம் ஜோடியாக ‘10 எண்றதுக்குள்ள…’ படத்தில் நடிக்கும் சமந்தா, சென்னையில் சித்தார்த் வீட்டில் தங்குகிறாராம். இதுகுறித்து சித்தார்த் கூட மீடியாவிடம் பேசத் தயங்குகிறார்.