என் தமிழ்

நான்காவது நாளாகத் தொடர்கிறது அன்வார் இப்ராஹிம் மீதான வழக்கு

anwar

அக்டோபர் 31, எதிர்கட்சித் தலைவர் அன்வார் இப்ராஹிம் மீது தொடுக்கப்பட்ட இரண்டாவது ஓரினப் புணர்ச்சி வழக்கில் அவருக்கு வழங்கப்பட்ட ஐந்து ஆண்டு சிறைத்தண்டனைக்கு எதிரான இறுதி மேல் முறையீட்டு விசாரணை இன்று நான்காவது நாளாகத் தொடர்கிறது.

அன்வாரின் வழக்கறிஞரான ராம் கர்பால், சைஃபுல் புகாரியின் மரபணு தொடர்பான சாட்சியங்கள் வாதத்தை வியாழக்கிழமை சமர்ப்பித்ததைத் தொடர்ந்து இன்று நீதிமன்றத்தின் முன்னிலையில் அன்வாரின் ஆதரவாளர்கள் கூடியுள்ளனர்.

இதனிடையே, அன்வார் மீதான இவ்வழக்கின் விசாரணை அடுத்த வாரம் செவ்வாய்க்கிழமை வரையிலும் நீடிக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Scroll to Top