அக்டோபர் 29, கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் 16,841 கிராம் எடைகொண்ட கஞ்சா வகை போதைப் பொருள் உட்கொண்ட குற்றத்திற்காக தாய்லாந்து நாட்டுப் பெண்மணி ஒருவருக்கு இங்குள்ள நீதிமன்றத்தில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.
33 வயதான ரொசாரின் நுகாவ் என்ற பெண்மணி மீதான குற்றஞ்சாட்டு நிரூபிக்கப்பட்டதையடுத்து நீதிபதி முகமது சாக்கி அப்துல் வாஹாப் மரணதண்டனை வழங்கி தீர்ப்பளித்தார்.
பட்டாயாவில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் வரவேற்பாளராகப் பணிப்புரிந்து வந்த ரோசாரின் கடந்த 2011-ஆம் ஆண்டு டிசம்பர் 9-ஆம் தேதி, இரவு 8.15 மணியளவில் ஷாஹாப் பேருந்து நிலையத்தில் 16841 கிராம் எடைகொண்ட கஞ்சா வகை போதைப் பொருளை விநியோகம் செய்ததற்காக அவர் குற்றம்சாட்டப்பட்டார்.