என் தமிழ்

சென்னையில் வெளுத்துகட்டும் கனமழை : மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

Rain01

அக்டோபர், 24 சென்னையில் இரவு முழுவதும் வெளுத்து வாங்கிய கனமழை தொடர்ந்து நீடித்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் சென்னையில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. சென்னையில் கடந்த இரு நாட்களாக அவ்வப்போது பெய்த மழை, நேற்றிரவு முழுவதும் வெளுத்து வாங்கியது. விடிய விடிய கொட்டித் தீர்த்த கனமழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் வாகனங்கள் சாலைகளில் ஊர்ந்து செல்கின்றன. மழை நீரை வெளியேற்ற மாநகராட்சி  உரிய நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Scroll to Top