இன்று பட்ஜெட் தாக்கல் செய்த பிரதமர், 4000 ரிங்கிட்டுக்கும் குறைவான சம்பளம் பெறும் குடும்பங்களுக்கு வருமான வரி விலக்கு அளிக்கப்படும் என்று கூறினார்.
3000 ரிங்கிட்டுக்கும் குறைவான குடும்ப வருமானம் பெறும் மலேசியர்களுக்கு உதவித் தொகை 650 ரிங்கிட்டிலிருந்து 950 ரிங்கிட்டாக உயர்த்தபட்டுள்ளது. இத்தொகை ஒரு ஆண்டில் 3 தவணையாக வழங்கப்படும். முதல் தவணையாக 300 ரிங்கிட் ஜனவரி மற்றும் மே மாதத்திலும், மீதம் 350 ரிங்கிட் செப்டம்பர் 2015 முதல் வழங்கப்படும்.
பாதுகாப்புத் துறைக்கு 4.9 பில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பெட்ரோல், டீசல், மற்றும் LPG ஆகிய எரிபொருளுருக்கு GST வரி விலக்கு அளிக்கப்படுகிறது.
அனைத்து ஆரம்பப் பள்ளி மற்றும் இடைநிலைப்பள்ளி மாணவர்களுக்கு ஆண்டு தொடக்க உதவித் தொகையாக 100 ரிங்கிட் வழங்கப்படும்.
2015-ஆம் ஆண்டு நாட்டில் GST வரி அறிமுகப்படுத்தப்படுவதால் நாட்டின் வருமானம் 23.2பில்லியன் ரிங்கிட்டாக அதிகரிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
2015ஆம் ஆண்டு பட்ஜெட் 273.9 பில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது 2014-ஆம் ஆண்டை விட 9.8 பில்லியன் ரிங்கிட் அதிகமாகும்.