என் தமிழ்

மலேசியாவில் 29 இடங்களில் காற்றுத் தரம் ஆரோக்கியமற்ற நிலை : 172 புள்ளிகளுடன் பத்து மூடா முதலிடம்

கோலாலம்பூர், 20 அக்டோபர் 2026 : மலேசியாவில் இன்று காலை 9 மணி நிலவரப்படி, நாடு முழுவதும் உள்ள 29 காற்றுத் தரக் கண்காணிப்பு நிலையங்களில் காற்று மாசுக் குறியீடு (IPU) ஆரோக்கியமற்ற அளவை எட்டியுள்ளது. கோலாலம்பூரின் பத்து மூடா பகுதியில் அதிகபட்சமாக 172 புள்ளிகள் பதிவாகியுள்ளன.

மலேசிய காற்று மாசுக் குறியீட்டு மேலாண்மை அமைப்பின் (APIMS) தரவுகளின்படி, சிலாங்கூரின் ஜோகான் செத்தியா பகுதியில் 171 புள்ளிகளும், பெட்டாலிங் ஜெயாவில் 166 புள்ளிகளும், ஷா ஆலமில் 165 புள்ளிகளும் பதிவாகியுள்ளன. நெகிரி செம்பிலானின் நீலாயிலும் 165 புள்ளிகள் பதிவாகியுள்ளன.

மேலும், கோலாலம்பூரின் செராஸ் பகுதியில் 164 புள்ளிகளும், மலாக்காவின் புக்கிட் ரம்பாய் பகுதியில் 163 புள்ளிகளும், புத்ராஜெயா மற்றும் சிலாங்கூரின் கிள்ளான் பகுதிகளில் தலா 162 புள்ளிகளும் பதிவாகியுள்ளன. நெகிரி செம்பிலானின் சிரம்பான் பகுதியில் 159 புள்ளிகளும், சிலாங்கூரின் பந்திங்கில் 158 புள்ளிகளும், ஜோகூரின் லார்கின் பகுதியில் 157 புள்ளிகளும், பாசீர் கூடாங்கில் 156 புள்ளிகளும் பதிவாகியுள்ளன.

பேராக்கின் தாசெக் ஈப்போ, மலாக்காவின் அலோர் காஜா மற்றும் திரெங்கானுவின் பாகா ஆகிய பகுதிகளில் தலா 155 புள்ளிகள் பதிவாகின. ஜோகூரின் கோத்தா திங்கியில் 154 புள்ளிகளும் பதிவாகின.

பகாங் மாநிலத்தின் ரொம்பின் பகுதியில் 153 புள்ளிகளும், பேராக்கின் பெகோ ஈப்போ, மலாக்கா நகரம் மற்றும் குவாந்தானின் பாலோக் பாரு ஆகிய இடங்களில் தலா 152 புள்ளிகளும் பதிவாகின. ஜோகூரின் குளுவாங் மற்றும் பெங்கராங் பகுதிகளில் 151 புள்ளிகள் பதிவாகியுள்ளன.

இதர பகுதிகளில் நெகிரி செம்பிலானின் போர்ட் டிக்சன் 145 புள்ளிகளையும், பகாங் மாநிலத்தின் ஜெராண்டுட் 137 புள்ளிகளையும், ஜோகூரின் தங்காக் 131 புள்ளிகளையும், பத்து பஹாட் 130 புள்ளிகளையும் பதிவு செய்துள்ளன. குவாந்தானின் இந்திரா மக்கோத்தா பகுதியில் 125 புள்ளிகளும், தெமர்லோவில் 103 புள்ளிகளும் பதிவாகியுள்ளன.

காற்று மாசுக் குறியீட்டில் 51 முதல் 100 வரை மிதமான நிலையாகவும், 101 முதல் 200 வரை ஆரோக்கியமற்ற நிலையாகவும், 201 முதல் 300 வரை மிகவும் ஆரோக்கியமற்ற நிலையாகவும் வகைப்படுத்தப்படுகிறது.

காற்றுத் தரம் தொடர்பான அண்மைய தகவல்களைப் பெற, மலேசிய சுற்றுச்சூழல் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://eqms.doe.gov.my/APIMS/main அல்லது MyJAS EQMS கைப்பேசி செயலியைப் பயன்படுத்தலாம்.

Scroll to Top